இந்த ஆண்டின் முதல் SMC MEETING ஜூன் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களை தேர்ச்சி பெற வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா 16.06.2025 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் தமிழ்செம்மல் விருது பெற்ற முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சோபிகா பிரியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிவுற்றது.
* சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2025 அன்று போக்குவரத்து காவலர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் எம் பள்ளிக்கு வருகை புரிந்து போதை பொருள் பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்து எடுத்துக் கூறினர். * பிறகு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Comments
Post a Comment