Skip to main content

Posts

Showing posts from August, 2025

பரிசளிப்பு நிகழ்வு - 19.08.2025

  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தன்று நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிழ்களும் வழங்கப்பட்டது. 

பரிசளிப்பு நிகழ்வு - 18.08.2025

 

சுதந்திர தின விழா - 15.08.2025

  இந்திய சுதந்திர தினவிழாவானது எம் பள்ளியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அத்ன் அழகிய காணொளி இதோ. CHSS, NORTH CBE - INDEPENDENCE DAY CELEBRATION 2025

Anti Drug Awareness Day - 11.08.2025

  சர்வதேச போதைபொருள் ஒழிப்புதின உறுதிமொழி போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போதைபொருள் ஒழிப்புதின ஓவியப்போட்டி போதைபொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை எழுதுதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன.  நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் போதைபொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.  இவை அனைத்திலும் காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

கலைத்திருவிழா 2025 - 26 - 13.08.2025

 

ENGLISH CLUB FOR THE MONTH OF AUGUST - 05.08.2025

  ஆகஸ்ட் மாதத்திற்கான English Club  05.08.2025 அன்று நடைப்பெற்றது.   அதில் Grammar Games  மூலம் ஆங்கில இலக்கணம் மிக எளிதாக விளையாட்டின் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டது.

கலைத்திருவிழா 2025 - 26 - 12.08.2025

  தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிக்காட்டுதலின்படி 2025 - 26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் 12.08.2025 அன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

சீருடைகள் வழங்குதல் - 04.08.2025

  வெங்கட்ரமணா ட்ரஸ்ட் மூலம் கொடுக்கப்பட்ட சீருடைகள் மாணவ, மாணவிகளுக்கு 11.08.2025 அன்று காலை வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.  சீருடைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்

Helping Hands - VENKATRAMANA TRUST - 03.08.2025

  வெங்கட்ரமணா அறக்கட்டளையின் மூலம் எம் பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடைகள் பொறுப்பு தலைமயாசிரியடம் வழங்கப்பட்டது.  சீருடைகள் வழங்கிய அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கும், இதற்கு முயற்சி எடுத்த எம் பள்ளி ஆசிரியர் திரு. குமார் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

திறன் - 2025

  கற்றலில் அடைவுத்திறன்கள் பெறாத மாணாக்கர்களுக்காக தமிழக பள்ளிக்கல்வித்துறையால் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒரு திட்டம்தான் திறன். இதில் அடிப்படை அடைவுத்திறன்களை பெறாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தனி பயிற்சி அளித்து கற்றலில் முன்னேற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டமானது எமது பள்ளியில் 1.08.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மீத்திறன் குறைந்த மாணவர்கள் இதில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.

CHILDREN FILM CLUB - 01.08.2025

  சிறார் திரைப்பட மன்றத்தின் முதல் திரையிடல் ஆகஸ்ட் 1 அன்று நடைப்பெற்றது.  ஜூலை மாதத்திற்கான திரைப்படமாக TOP 10 2024 - 25 என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.  மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.  பிறகு மாணவர்கள் திரைப்படத்தை குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

SMC MEETING - 25.07.2025

    இந்தக் கல்வியாண்டின் முதல்  SMC  கூட்டம் ஜூலை 25 அன்று நடைப்பெற்றது.  தலைவரையும், உறுப்பினர்களையும், பெற்றோரையும் வரவேற்று  SMCபுதிய     செயலி, பள்ளியின் ஒரு மாதகால நிகழ்வுகள், திறன் திட்டம், அடைவுத்தேர்வு என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பெற்றோரின் கருத்துகளையும் கேட்டறிந்து அவைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எதிர்கால தலைவர்கள் - 18.07.2025

  நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பணியினை செய்துவரும் பள்ளி என்னும் கட்டமைப்பில்  பள்ளி மாணவத் தலைவர்  பள்ளி மாணவத் துணைத்தலைவர் வகுப்புத் தலைவர்கள் வகுப்பு துணைத்தலைவர்கள்   ஆகியோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேட்ஜ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

கல்வி வளார்ச்சி நாள் - வினாடி வினா மன்றம் - 15.07.2025

  கல்வி வளர்ச்சி நாள் அன்று நடைப்பெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சி நாள் - 15.07.2025

  கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15 நிகழ்வுகள் இசைராணி நிரஞ்சனாவின் இசை நிகழ்ச்சி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று  மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அப்பாட ஆசிரியர்களால் கேடயமும், பரிசும் வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அபிநந்தாவிற்கும், 2023-24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சக்திபாலாவிற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

மகிழ் முற்றம் - துவக்க விழா - 11.07.2025

                                                                                                                                                                                                      தமிழக பள்ளிக்கல்வித்துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகிழ் முற்றம் எனப்படும் Housing System துவக்க விழா ஜூலை 11 அன்று எம் பள்ளியில் விமரிசையாக நடைப்பெற்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் இரு பொறுப்பாசிரியர்கள் மற்றும் இரு மாணவத் தல...